ABOUT US
WORLD PEACE DAY
EVENTS
MEDIA
PUBLICATIONS
Donate now
ABOUT US
WORLD PEACE DAY
EVENTS
MEDIA
PUBLICATIONS
Donate now

World Peace Day-2026

வடஅமெரிக்கா பன்னிரு திருமுறைக்கழகம் (NAPTA) மற்றும் ஓதுவாமூர்த்திகள் நலச்சங்கம்

இணைந்து நடத்தும்

ஐக்கிய நாடுகள் சபையின் "உலக அமைதி தின" நாளில்

உலக நலன் கருதி திருமுறை விண்ணப்பம்

நாள் : புரட்டாசித்திங்கள் 4ஆம் நாள் (21.09.2026) திங்கட்கிழமை

நேரம் : காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை

இடம் : கோகுலம் திருமண மண்டபம், மேலரதவீதி, சங்கரன்கோவில்.

உ

“பேற்றினால் பிறைச் சென்னியினான் பெருவேளூர் தேற்றனார் திருமாக்கள் கோன் திருமாவலோர் கூற்றனார் குரங்காடுதுறை திருக்கோவில் ஏற்றனார் எய்தமான் இடையாறு இடைமருதே – சுந்தரர்”

மெய்யன்புடையீர்!

தென்பாண்டி நாட்டில் தாமிரபரணி நதி இருகரையிலும் பல சிவாலயங்கள் அமைந்துள்ளன. அதில் பாடல் பெற்ற தலங்களான மதுரைக்கு தெற்கே, திருநெல்வேலிக்கு வடக்கே, திருக்குற்றாலத்திற்கு கிழக்கே, திருச்சுழிக்கு மேற்கே அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான தலம் சங்கரநயினார்கோயில். முன்னொரு காலத்தில் சங்கன், பதுமன் எனும் இரு பாம்பரசர்களுக்கிடையே சிவன் பெரியவர், விஷ்ணு பெரியவர் என்ற தர்க்கம் ஏற்பட தேவகுருவாகிய வியாழபகவான் அவர்களிடம் சொல்கிறார். இறைவி திருக்கயிலையில் சங்கரநாராயண கோலத்தை சிவபிரானிடம் கேட்க, இறைவன் உத்தரவுப்படி புன்னைவனத் தலமாம் சங்கரன்கோயிலில் தேவமாதர்கள் பசுக்கூட்டங்களாக சிவபூஜைக்கு பால் அளித்துதவ, பல்லாண்டுகள் அம்பிகை தவம் புரிய, ஆடித் திங்கள் உத்திராட நட்சத்திரமும் பெளர்ணமியும் கூடிய நன்னாளில் ரிஷப வாகனத்தில் இடமால் தழுவிய பாகமாம் சங்கரநாராயணராகவும், யானை வாகனத்தில் சங்கரலிங்கராகவும், இறைவன் அம்பிகைக்கு காட்சி கொடுத்தார் என்று கூறுகிறார். இச்செய்தி கேட்ட சங்கனும், பதுமனும் தவமிருந்து சங்கரநாராயணக் கோலத்தை கண்டு தரிசித்தார்கள். பின்னொரு காலத்தில் மணிக்கீரிவன் என்பார் இத்தலத்தில் இருந்த நந்தவனத்தை சீர்செய்யும் பொழுது புற்றிலிருந்து நாகங்கள் குடை பிடிக்க புற்றிடங் கொண்டாராக சங்கரலிங்கமாக இறைவன் காட்சி கொடுத்து அருளினார். அவ்வமயத்தில் உக்கிரன்கோட்டை எனும் சிற்றூரை ஆண்டு வந்த உக்கிரபாண்டியன் மன்னன் மதுரை சென்று சொக்கநாதரை தரிசனம் செய்ய செல்லும் வழியில் பட்டத்து யானை மண் இடறி தொடர்ந்து செல்லாது யாத்திரை தடைபட, இறைவன் அசரீரியாக “யாம் புன்னைவனத்தில் காட்சி தருகிறோம்” என அருள, இத்தலத்தில் தரிசனம் செய்து கோவில் எழுப்பியது வரலாறு. சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச்செய்த திருஇடையாறு தல தேவார பதிகத்தில் “திருமாமகள் கோன் திருமால் ஓர் கூறனூர்” என்று அருளிச் செய்ததை மேற்கோள் காட்டி சங்கரன்கோவிலை தேவார வைப்புத்தலமாக தமிழ்த்தாத்தா திரு. உ.வே. சாமிநாத ஐயர் குறிப்பிடுகிறார். பாடல் பெற்ற தலங்களில் பஞ்சபூத தலங்கள் குறிப்பிடுவது போல் தென்பாண்டி நாட்டில் சங்கரன்கோவிலை முதன்மையாக கொண்டு தாருகாபுரம், கரிவலம் வந்த நல்லூர், தென்மலை, தேவதானம் போன்ற தலங்களை பஞ்சபூத தலங்களாக சான்றோர்கள் கருத்துப்படி மகா சிவராத்திரி ஒரு நாளில் இந்த ஐந்து தலங்களையும் வழிபட்டு வருகின்றனர். இது போன்று பல சிறப்புகளைக் கொண்ட சங்கரன்கோவிலில் வரும் செப்டம்பர் 21ந் தேதி புரட்டாசித் திங்கள் 4ஆம் நாள் திங்கள்கிழமை மேலரதவீதி கோகுலம் திருமண மண்டபத்தில் காலை 7மணி முதல் இரவு 7மணி வரை உலக அமைதி, நலன், மழை வேண்டி திருமுறை தொடர் பாராயணம் நிகழ உள்ளது. இப்பாராயணத்தில் அன்பர்கள் திரளாக கலந்து கொண்டு திருவருள் பெற்று உய்யுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இங்ஙனம்

வடஅமெரிக்கா பன்னிரு திருமுறைக்கழகம் (NAPTA) மற்றும் ஓதுவாமூர்த்திகள் நலச்சங்கம்!

வடஅமெரிக்கா பன்னிரு திருமுறைக்கழகம் (NAPTA) அமெரிக்கா சைவ சித்தாந்த சபை மற்றும் இறைவார்த்திக்கள் நலச்சங்கம்

இணைந்து நடத்தும்

ஐக்கிய நாடுகள் சபையின் "உலக அமைதி தின" நாளில்

உலக நலன் கருதி திருமுறை விண்ணப்பம்

நாள் : புரட்டாசித்திங்கள் 4ஆம் நாள்

(21.09.2026) திங்கட்கிழமை

நேரம் : காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை

இடம் : கோகுலம் திருமண மண்டபம், மேலரதவீதி, சங்கரன்கோவில்.

World Peace Day 2026

2026 WPD Session 1

2026 WPD Session 2

2026 WPD Session 3

2026 WPD Session 4

2026 WPD Session 5